Home உலகம்மலாவியில் கடும் வெள்ளப்பெருக்கு 23 பேர் பலி…

மலாவியில் கடும் வெள்ளப்பெருக்கு 23 பேர் பலி…

by admin

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்ற நிலையில் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 11 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் சுமார் 1 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இரண்டு முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேரைக் காணவில்லை எனவும் ராணுவம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More