அரசாங்கத்துக்கு எதிராக கட்டியெழுப்பப்படும் எந்தவொரு கூட்டணிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்க தயாரென, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இருதரப்பினருக்கிடையில் முரண் நிலை எழுந்துள்ளதாக, கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவிலும், இருதரப்பினருக்கிடையில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.