Home சினிமாசென்னையில் ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு

சென்னையில் ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு

by admin



நடிகர் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்த நிலையில், வருகிற 14ஆம் திகதி சென்னையில் திருமண வரவேற்பு  நடைபெறவுள்ளது.

‘அறிந்தும் அறியாமலும்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தன்று தமது காதல் குறித்து அறிவித்திருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி மாலை ஹைதராபாத்தில்  ஆர்யா – சாயிஷாவின் திருமண சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ஆர்யா-சாயிஷா திருமணம் நேற்று இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திதுய்யளனர்

நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம், ராணா தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், ஞானவேல் ராஜா, தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சென்னையில் ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More