கலஹா பொலிஸ் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு (டேசன் தோட்டம்;) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று கடந்த 25ம் திகதி முற்றாக சேதத்திற்கு உள்ளானதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தோட்டத்தின் உத்தயோகஸ்த்தர் விடுதியில் தங்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஊர் மக்கள்¸ கிராமசேவகர்¸ கலஹா பொலிஸார்¸ தொழுவ அனர்த்த முகாமைத்துவ பிரிவு உட்பட நலன்விரும்பிகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
பாதிக்கபட்ட 28 பேரில் 09 பேர் பாடசாலை செல்லும் சிறுவர்களாவர். 50 தொடக்கம் 60 வயதுடைய ஆண்கள் 04 பேரும்¸ 40 தொடக்கம் 60 வயதுடைய பெண்கள் 05 30 தொடக்கம் 20 வயதுடைய பெண்கள் 02 பேரும் ஆண்கள் 03 பேரும் 15 தொடக்கம் 20 வயதுடைய பெண்கள் இளைஞர்கள் 05 பேரும்; இந்த அகதி முகாமில் தங்கி உள்ளனர்.
புசல்லாவையில் தீ விபத்து லயன் குடியிருப்பு முற்றாக சேதம் – 28 பேர் இடம் பெயர்வு
Dec 25, 2016 @ 13:26
கலஹா பொலிஸ் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு ( டேசன் தோட்டம் ) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் இந்த தீ வீடொன்றில் இருந்து பரவியுள்ளது. தீக்கான காரணம் மின்சார கசிவாக இருக்கலாம் என சந்தேக படும் அதே வேளை ஊர் மக்களின் உதவியால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இருந்தும் குறிப்பிட்ட சில வீடுகளில் சில பொருட்கள் பொது மக்களின் உதவியால் காப்பாற்றப்பட்ட போதும் பெரும் அளவிலான பொருட்களும் வீட்டு தொகுதியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
ஸ்தலத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்னினைப்புக்களை துண்டித்துள்ளனர். தோட்ட நிர்வாகத்தினர்¸ஊர் மக்கள் பாதிக்கப்பட்ட சிறியோர் உட்பட பெரியோர் அடங்களான 28 பேரை தோட்டத்தின் சனசமுக நிலையத்தில் தற்காலிகமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.