அயோத்தி விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றம் நியமித்த சமரச குழு, பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிலையில் வழக்கின் மனுதாரர்கள் நேற்று இந்த குழு முன் முன்னிலையாகியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 8ம் திகதி நியதித்திருந்தது.
இந்த குழு ஒரு வாரத்துக்குள் சமரச பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 8 வாரங் களுக்குள் அதை முடித்து நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்ட நிலையில் அங்கு சென்றுள்ள குழுவினர் நேற்று சமரச பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக வழக்கின் 25 மனுதாரர்கள் தங்கள் வக்கீல்களுடன் சமரச குழு முன் முன்னிலையாகியுள்ள நிலையில் . இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.