நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரு மசூதிகளில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் ஐவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கேரளா, தெலுங்கானா, குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னர் 8 இந்தியர்களைக் காணவில்லை எனவும் அவர்கள் தொடர்பிலான தகவல்களை விசாரணை செய்து வழங்குமாறும் இந்திய தூதரகம், நியூசிலாந்து அரசாங்கத்தை கோரியிருந்த நிலையில் தற்போது இந்தியாவைச் சேர்ந்த ஐவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த 49 பேரில், பலர் நியூசிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது