விவசாயிகளுக்காக வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு, தேர்தல் ஆணையகத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டம் மேலும் அனுமதிக்கப்படுமா என்பது குறித்து அனைவரதும் கவனம் தேர்தல் ஆணையகத்தின் மீதேயுள்ளது. தேர்தல் நடைமுறையில் இருக்கும் இக்காலப்பகுதியில் வழங்கப்படும் குறித்த நிதியுதவியானது, வாக்குக்காக வழங்கப்படும் இலஞ்சம் என வெளிப்படையாகவே தெரிகிறது.
ஆந்தவகையில் பணமதிப்பு நீக்கத்தை அனுமதித்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை சீரழிந்ததை போல விவசாய நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் ஆணையகத்தின் நம்பகத்தன்மைமையும் சீரழியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி சம்மான் எனப்படும் நிதி திட்டத்தின் கீழ் நாடுமுழுவதுமுள்ள விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக நிதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.