நியூசிலாந்தில் துப்பாக்கி உரிமம் பெறுவதில் உள்ள சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பான சீர்த்திருத்துவதற்கு அமைச்சரவையின் ஆதரவு கிடைத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன 20 பேர் காயமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அகதிகள் முகாமிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது துப்பாக்கி உரிமம் பெறுவதில் உள்ள சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இன்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஜெசிந்தா சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பான சீர்த்திருத்துவதற்கு அமைச்சரவையின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் சீர்த்திருத்தங்கள் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை அரை தானியங்கி துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என நியூசிலாந்து காவற்துறைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.