அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் திடீர் புயலால் கனமழை பெய்துள்ளதுடன் உறைபனியும் உருகியதால ஆறுகள், சிற்றோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துள்ளதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். வீதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் தகவல் தொடர்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மற்றும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருப்பதால் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.