Home உலகம்ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

by admin


ஆப்கானிஸ்தானில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹேரட் மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்துள்ள நிலையில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், சிலர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதாகவும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அருகாமையில் உள்ள பாமியான் மாகாணத்தில் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ள நிலையில் உறைப்பனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More