Home இந்தியாடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து

by admin


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பகுதியில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில்; இன்று மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டதனையடுத்து தீயணைப்பு படையினர் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள அன்சாரி நகர் பகுதியில் அமைந்துள்ள எய்ம்ஸ்பல்நோக்கு மருத்துவமனையில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பகுதியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கொளுந்து விட்டெரியும் தீ காற்றின் வேகத்தில் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாகவும் தகவலறிந்து நான்கு வாகனங்களில் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டளளது

இந்த தீவிபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More