Home இலங்கைஅர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெப்ரி அலோசியஸ் கைது…

அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெப்ரி அலோசியஸ் கைது…

by admin


பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையான பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ், அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட நால்வர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More