Home உலகம்நவாஸ் ஷெரீப் பிணையில் வெளிவந்துள்ளார்…

நவாஸ் ஷெரீப் பிணையில் வெளிவந்துள்ளார்…

by admin


ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக பிணை வழங்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார்.  69 வயதான நவாஸ் ஷெரீபபுக்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இருதய நோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை சுட்டிக்காட்டி அவருக்கு பிணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதனையடுத்து அதனை விசாரித்த நீதிபதிகள் 6 வாரங்கள் பிணை வழங்கியுள்ளனர். பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம் என்ற போதிலும், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவாஸ் ஷெரீப் 3 மாத கால சிறைவாசத்திற்குப இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More