Home இலங்கையாழ்.கீரிமலை வாளுடன் நடமாடிய இளைஞர் கைது..

யாழ்.கீரிமலை வாளுடன் நடமாடிய இளைஞர் கைது..

by admin

யாழ்.கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் காங்கேசன்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இளைஞர் ஒருவர் வாளுடன் நடமாடுவதாக நேற்று இரவு காங்கேசன்துறை பொலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் வழங்கினார்கள்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வாளுடன் நடமாடிய குறித்த நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டரை அடி நீளமான வாளினையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் கொல்லன்கலட்டி பகுதியை சேர்த்த 27 வயது இளைஞன் என பொலிசார் தெரிவித்தனர். குறித்த நபருக்கும் , கீரிமலை பிரதான வீதியில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே குறித்த நபர் அவரை வாளினால் வெட்ட முற்பட்ட நிலையிலையே தாம் கைது செய்தோம் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More