Home இலங்கையாழில்.கஞ்சா -ஹெரோயின் போதை பொருட்களை வைத்திருந்த ஐவர் கைது

யாழில்.கஞ்சா -ஹெரோயின் போதை பொருட்களை வைத்திருந்த ஐவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழில்.கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாழ்.மாவட்ட காவல்துறை புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான காவல்துறை விசேட குழுவினர் நேற்று முன்தினம் இரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வல்வெட்டித்துறையை சேர்ந்த இருவர் கஞ்சா போதை பொருளை கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 12 கிலோ 300 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்க்கப்பட்டுள்ளது

அதேவேளை அச்சுவேலியை சேர்ந்த நபர் ஒருவரும் கஞ்சா போதை பொருளை கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து ஒரு கிலோ 385 கிராம் கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாண காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

அதேவேளை மல்லாகம் புகையிரத நிலையத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் இருவரை காங்கேசன்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையின் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மல்லாகம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர்; தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More