Home இலங்கை வீட்டு வளாகத்துக்குள் புகுந்த பெண்ணும் மகனும், 3 இளம் பெண்களை கடுமையாக தாக்கினர்.

வீட்டு வளாகத்துக்குள் புகுந்த பெண்ணும் மகனும், 3 இளம் பெண்களை கடுமையாக தாக்கினர்.

by admin


வீட்டு வளாகத்துக்குள் புகுந்த பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் சகோதரிகளான 3 இளம் பெண்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பித்தனர். தாக்குதலுக்குள்ளான இளம் பெண்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் உடும்பிராய் தெற்கு யோகபுரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
முன்பள்ளியின் பாவனையில் இருந்த காணி ஒன்றை கோப்பாய் பிரதேச செயலாளரால் வீட்டுத் திட்டத்துக்காக குடும்பம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் நீடிக்கும் குழப்ப நிலையின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் 23 வயதுடைய ரெம்சிகா 18 வயதுடைய , ரம்யா, மற்றும் 16 வயதுடைய யெனுஷா ஆகிய மூன்று பேருமே தாக்குதலுக்குள்ளாகினர்.

முன்பள்ளியின் மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வளவுக்குள் அத்துமீறிய பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் இளம் பெண்கள் மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் மயக்கமடைந்து சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். அதனை அடுத்து அயலவர்கள் தாக்குதலுக்கு இலக்கனவர்களை மீட்டு கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வண்டி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More