147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உணவு பாதுகாப்பு வாரத்தையொட்டி மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட உணவுப் பொருட்களை கையாலும் உணவகங்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கு உணவுப் பொருட்களை கையாளும் விதம் தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்து கருத்தமர்வு இன்று (2) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.
.
இதன் போது பொது சுகாதார பரிசோதகர்கள்,மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். குறித்த கருத்தமர்வில் உணவகங்களின் உரிமையாளர்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்கள்,வண்டில்களில் உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் என உணவுப்பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக உணவு பொருட்களை கையாளும் உணவங்களில் மேற்றகொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், கடமையாற்றுபவர்களின் சுகாதாரம் மற்றும் உணவுப்பொருட்களை வைக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் ஒரு சில தினங்களில் உணவு கையாளும் நிலையங்களுக்கு திடீர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தமது அவதானங்களை மேற்கொள்ளவுள்ளதோடு, ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.
சட்ட திட்டங்களுக்கு அமைய இயங்காத உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love