Home உலகம்டிரம்பின் பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்ற சீனப்பெண் கைது…

டிரம்பின் பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்ற சீனப்பெண் கைது…

by admin


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜனாதிபதி டிரம்பின் பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்ற சீனப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து வைரஸ் நிறைந்த பென்டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சனிக்கிழமை மதியம் டிரம்பின் பண்ணை வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் விசாரித்த போது அந்தப்பெண் உள்ளே நீச்சல் குளத்திற்கு குளிக்க செல்வதாக கூறியுள்ளார்.

எனினும் அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் குறித்த பெண் தங்கியிருந்த விடுதியில் விசாரித்த போது அந்தப்பெண் ஐக்கிய தேசிய சீன அமெரிக்க கூட்டுறவு சங்கத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்துள்ளதாக கூறியது தெரிய வந்தது.

இதையடுத்து பொய் கூறியதாக தெரிவித்து அவரை கைது செய்து அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில், 2 சீன கடவுச்சீட்டுக்கள் வைரஸ் நிரம்பிய பென்டிரைவ் மற்றும 4 கைத்தலைபேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரகைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More