Home சினிமாமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்!

மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்!

by admin


‘வோண்டட்’ திரைப்படத்தை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் உருவாகும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை தமிழின் பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி முதலிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கான் நடிக்க ‘வோண்டட்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார். இந்த படம் பெரும் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், அஜய்தேவ்கன் நடித்த ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ மற்றும் ராமையா வாஸ்தாவையா, ஆர்.ராஜ்குமார், சிங் இஸ் பிளிங் ஆகிய படங்களை இயக்கி இந்தி பட உலகிலும் முன்னணி இயக்குனராக உள்ளார் பிரபுதேவா. இந்த நிலையில் மீண்டும் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குகின்றார்.

இந்தியில் வெளியாகி பரபரப்பாக ஓடிய தபாங் திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகவுள்ளது. இதன் முதல் பாகம் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாம் பாகத்தை அர்பாஸ்கான் இயக்கினார். தபாங் 3ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கி உள்ளது. இதனை சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். சல்மான் கான் நாயகியாக சோனாக்சி சின்ஹா நடிக்கிறார்.

பிரபுதேவா நடிப்பில் தேவி-2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுதவிர யங் மங் சங், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More