Home பிரதான செய்திகள்சென்னையை மும்பை 37 ஓட்டங்களினால் வென்றுள்ளது

சென்னையை மும்பை 37 ஓட்டங்களினால் வென்றுள்ளது

by admin


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 170 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து 171 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து, 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 37 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More