Home உலகம்பிரெக்ஸிற் தொடர்பில் தெரசா மேக்கு எதிர்ப்பு – அமைச்சர் பதவி விலகல்

பிரெக்ஸிற் தொடர்பில் தெரசா மேக்கு எதிர்ப்பு – அமைச்சர் பதவி விலகல்

by admin


பிரெக்ஸிற் விவகாரத்தில் பிரித்தானிய பிரதமர் தெரசா மேக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைச்சர் நைஜல் அடம்ஸ் பதவிவிலகியுள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 4-வது முறையாக வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் பரிசீலித்து வரும் பிரதமர் தெரசா மே இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஜெரேமி கோர்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வேல்ஸ் பகுதிக்கான அமைச்சர் நைஜல் அடம்ஸ் ஜெரேமி கோர்பைனை பிரதமர் தெரசா மே சந்தித்து பேச இருப்பது மிகப்பெரிய தவறு எனத் தெரிவித்துள்ளதுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More