தேசிய ஒற்றுமை முழுமையாக கட்டியெழுப்ப வேண்டுமானால் நிலைமாற்று நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொஹான் பெரோ தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகளும் உருவாக்கிகொடுப்பதும் அவசியமாகும் என்பதனால் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முன்னெடுக்க தேசிய சமாதான பேரவை தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சமாதான பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்களுக்கான போட்டி நிகழ்வின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.