முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஒரு வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அவரை பிணையில் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும்,அ வரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது