மத்தியப்பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக பதவி வகித்து வரும் முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரியான பிரவீன் காக்கர் என்பவரின் இருந்து தலைநகர் போபாலில் உள்ள வீட்டிலேயே இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் இதனை தவிர்த்து வேறு பல இடங்களிலும் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல், போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உள்பட 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது