Home இலங்கைஅரியாலையில் வெடிபொருள்ள் மீட்கப்பட்டன…

அரியாலையில் வெடிபொருள்ள் மீட்கப்பட்டன…

by admin

அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாக உள்ள வெற்றுக் காணியில் வெடிபொருள்ள் மீட்கப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியை துப்பரவு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

பெகோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் 2 பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ரவைகள், மகசின்கள் மற்றும் மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டன.

துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியததன் பிரகாரம், அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், துப்பரவு பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு அதிரடிப் படையினர் வந்து ஆயுதங்களை மீட்ட பின்னர் துப்பரவு பணிகளை முன்னெடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More