ஏழு கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் இன்று ஏப்ரல் 11ம் திகதி காலை ஏழு மணிக்குத் ஆரம்பமாகியுள்ளது.
இத்துடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கும் இன்று வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது . ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் வாக்களிக்க 3.93 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிகளுக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.