Home பிரதான செய்திகள்அவுஸ்திரேலிய உலக கிண்ண அணியில் ஸ்மித், வோர்னர் இணைப்பு

அவுஸ்திரேலிய உலக கிண்ண அணியில் ஸ்மித், வோர்னர் இணைப்பு

by admin


உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அவுஸ்திரேலியா அணியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்

12-வது சர்வதேச உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பிரித்தானியாவில் மே 30ம் திகதி முதல் ஜூலை 14-ந் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஸ் , இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆரோன் பின்ஞ் தலைமையிலான உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் ஸ்மித், வோர்னர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்

தென்னெபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அணித்;தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீது ஒருவருட தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More