Home இலங்கைஇணைப்பு 2 – மானிப்பாயில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கையடக்க தொலைபேசிகளில் இருந்து படங்கள் மீட்பு

இணைப்பு 2 – மானிப்பாயில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கையடக்க தொலைபேசிகளில் இருந்து படங்கள் மீட்பு

by admin

மானிப்பாயில் கைது செய்யப்பட்ட எட்டு இளைஞர்களின் கையடக்க தொலைபேசிகளில் இருந்து படங்கள் மீட்பு – படங்களில் உள்ளோரை இனம் கண்டு கைது செய்ய நடவடிக்கை

 

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், 8 பேர் கைது..

Apr 15, 2019 @ 10:06

யாழ்.மானிப்பாய் பகுதியில் காவற்துறையினர்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மானிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவற்துறையினர்  திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில , 8 பேரை மானிப்பாய் காவற்துறையினர்  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவற்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More