மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக அணித் தலைவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என பங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 8 மணிக்கு தொடர் நள்ளிரவில்தான் முடிவடைகின்ற நிலையில் போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால் அந்த அணியின் தலைவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் ரோகித் சர்மா, ரகானே, விராட் கோலி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைப்படி அணி தவறு செய்தால், அதற்கு அணித்தலைவருக்கு அபராதம் விதிக்க வேண்டிய நிலை உள்ளது. இது அவர்களை பாதிப்பதனால் அபராதத்திற்குப் பதில் இன்னிங்ஸ் இடைவேளையை 20 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கலாம் என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.