Home பிரதான செய்திகள்பெங்களூரு சென்னையை ஒரு ஓட்டத்தினால் வென்றுள்ளது

பெங்களூரு சென்னையை ஒரு ஓட்டத்தினால் வென்றுள்ளது

by admin

ஐ.பி.எல்.தொடரின் 39 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை ஒரு ஓட்டத்தினால் வென்றுள்ளது

நேற்றிரவு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில்; நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து 162 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More