Home இலங்கைஊரடங்கு வேளையில் மதுபோதையில் நடமாடியவருக்கு விளக்கமறியல்

ஊரடங்கு வேளையில் மதுபோதையில் நடமாடியவருக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில்,ஊரடங்கு அமுலில் இருந்த வேளை மதுபோதையில் நடமாடியவரை மூன்று நாள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்வங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்திருந்தது.

அந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நெல்லியடியை சேர்ந்த 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மதுபோதையில் நெல்லியடி நகர் பகுதியில் நடமாடியுள்ளார்.

அவரை சந்தேகத்தில் கைது செய்த நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் அவரை கைது செய்த காவல்துறையினர் ; நேற்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை மதுபோதையில் வீதியில் நடமாடினார் என குற்றம் சுமத்தி முற்படுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து நீதிவான் நாளை புதன்கிழமை வரையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More