Home இலங்கைநெடுந்தீவில் கைது இளைஞருக்கு விளக்கமறியல்

நெடுந்தீவில் கைது இளைஞருக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நெடுந்தீவு பிரதேசத்தில் தொலைபேசி சாதனங்கள் மற்றும் அவற்றுக்குரிய சில சிம் அட்டைகளுடன் முஸ்லீம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நெடுந்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட குறித்த இளைஞர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ. சபேசன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

அதன் போது அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த நபர் வவுனியாவில் இருந்து நெடுந்தீவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது மனைவியுடன் வந்திருந்தார் எனவும் , பின்னர் சொந்த அலுவல்கள் காரணமாக நெடுந்தீவில் இருந்து திரும்பும் போது இறங்குதுறையில் வைத்து காவல்துறையினர் கைது செய்ததாக மன்றுரைத்தார்.

அத்துடன் நெடுந்தீவில் உள்ள வீட்டார் , வீட்டினை சுத்தம் செய்யும் போது தமது பழைய தொலைபேசிகள் மற்றும் அவற்றுக்கு உரிய சாதனங்கள், சில சிம் அட்டைகள் என்பவற்றை ஒரு பாக்கில் போட்டு வைத்திருந்ததாகவும் , நெடுந்தீவில் இருந்து கிளம்பும் போது , அந்த பையையும் மாறி தூக்கி வந்த சமயமே காவல்துறையினர் கைது செய்தனர் எனவும்  தெரிவித்தார்.

அதேவேளை காவல்துறையினர் குறித்த நபருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் , விசாரணைக்கு ஏதுவாக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கமாறு கோரினார்.

அதனை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

 

#arrest #neduntheevu  #mobile

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More