அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிளை மத்திய புலனாய்வு காவல்துறையினர் நெதர்லாந்தில் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள கார்னிஜே என்ற புகழ்பெற்ற நூலகத்தலிருந்து கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டொலர் பெறுமதியான 300-க்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களை திருடி சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு திருடிச்சென்றவற்றில் 404 ஆண்டுகள் பழமையான பைபிளும் உள்ளடங்குகின்ற நிலையில் சம்பவம் இடம்பெற்று 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டள்ளது. நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இவ்வாறு திருடப்பட்ட பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 12 ஆயிரம் டொலர்கள கொடுத்து, அந்த பைபிளை மீட்ட மத்திய புலனாய்வு காவல்துறையினர் அதனை கார்னிஜே நூலகத்தில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#bible #americs #library #netherlands