190
நைஜீரியாவில் 2 காவல்துறை அதிகாரிகளை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரை கடத்திச்சென்றுள்ளனர். நைஜீரியா நாட்டின் தென் மாகாணமான ரிவர்ஸ்சில் இயங்கிவருகின்ற புகழ் பெற்ற ஷெல் எண்ணெய் நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம் தொடர்பாக அயல் மாகாணமொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு பாதுக்காப்புக்காக சென்ற காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்படம்டுள்ளதுடன் அவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
#workers #kidnapped #Nigeria #Shell
Spread the love