Home உலகம் சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்

சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்

by admin


சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்கா இந்த சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் மரபு ரீதியிலான ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதுடன் குறிப்பாக சிறிய ரக ஆயுதங்கள் தொடங்கி போர் விமானம் வரை இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இந்த ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா விலகுவது பற்றி ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலித்து வந்த நிலையில், இண்டியானாபொலிஸ் நகரில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப் சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் நாம் போட்ட கையெழுத்தை திரும்பப்பெறுகிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தினை அமெரிக்காவிடம் இருந்து ஐ.நா. சபை பெற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

#usa #obama #un #InternationalArmsTradeAgreement #trump

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More