Home இலங்கைஎன்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன்

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  கடந்த  செம்ரெம்பா் மாதம்  கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு    நட்ட ஈட்டினை வழங்கி விட்டு   உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் வீட்டுத்திட்டத்தின் பொழுது இப்பொழுது பல பிரச்சனைகள் காணப்படுகின்றன.  மண்  இல்லை ,வேலைகளைச்  செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை  போன்ற  பல  பிரச்சனைகள் காணப்படுகின்றன.

இதனால் நான் பிரதமருடன்  பேசி முன் அமைக்கப்பட்ட ஒரு தொகை   வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்வந்திருக்கின்றேன். அந்த வீட்டுத்திட்டத்தின்  மூலம் ஒரு வீட்டை  நான் சுன்னாகத்திலே  கட்டி இருக்கின்றேன்.  இந்த வீட்டை  எத்தனையோ பேர்  சென்று பார்வையிட்டு இருக்கின்றனர்.

ஆனாலும்  இவற்றுக்கு  எதிர்ப்பை  காண்பதற்கு பலர் இருக்கின்றனர்  அதனைப்பற்றி  இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை எனினும்  இத்திட்டம்  முற்றுமுழுதாக மக்கள் நலம்  சார்ந்ததே ஆகவே  இத்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் எனவும்  தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து  நிகழ்வின்  முடிவில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் இருக்கிறதா  என ஊடகவியலாளர்களினால்  தொடுக்கப்பட்ட  கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல்  சென்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More