பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு மூன்று சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியில் நெய்மர் உபாதை காரணமாக விளையாடவில்லை எனினும் போட்டி முடிவு நடுவர்கள் வழங்கிய பெனால்டி தீர்ப்பால் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்கு எதிராக அமைந்தது.
இதனால் கோபமடைந்த நெய்மர், நடுவர்களை தரக்குறைவாக சமூகவலைதளத்தில் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் நெய்மர், நடுவர்களை தரக்குறைவாகவும், அவமரியாதை செய்யும் விதமாகவும் செயல்பட்டதாக தெரிவித்து அவருக்கு 3 சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது
#Neyma #banned #ParisSaintGermain