இந்திய பாராளுமன்றத்துக்கு 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது. இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.பீகார் ஜார்கண்ட் , மத்திய பிரதேசம் மராட்டியம் , ஒடிசா , ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் மேற்கு வங்காளம், காஷ்மீர் ஆகிய இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இன்றைய வாக்குப்பதிவனையடுத்து இந்த தொகுதிகளில் மாநில காவல்துறை படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.
பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் எதி-ர்வரும் மே மாதம் 6-ம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.