தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மேனகா காந்தி கடந்த 14-ம் திகதி மேற்கொண்ட பிரசாரத்தின் போது தனக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஏ.பி.சி.டி., என வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்றார் போல் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் மேனகா காந்தியின் இந்த கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள தேர்தல் ஆணையகம் எதிர்காலத்திலும் இதுபோன்ற நடத்தை விதிமீறலில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.
மேனகா காந்தி இதற்கு முன்பும் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியிருந்த நிலையில் அவருக்கு பொதுக் கூட்டம், பேரணி, பேட்டி போன்ற செயல்களில் ஈடுபட தேர்தல் ஆணையகம் 48 மணி நேரம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#menagaganthy #electioncommsion