குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேற்று முன்தினம்(29-04-2019) சுகாதார அமைச்சினால் 146 புதிய மருத்துவ நிர்வாக சேவை நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் மூலம் இதுவரை வெற்றிடமாகக் காணப்பட்ட பிரதி மருத்துவ நிர்வாக சேவை (Deputy Administrative Grade) பதவிகள் சகலதும் நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவுகளில் வினைத்திறனான சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்குடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தகுதிவாய்ந்த மருத்துவ நிர்வாக சேவை ஆளணியினர் இதுவரை வெற்றிடமாக காணப்பட்ட இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
வடக்கில் நியமிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் சிங்கள வைத்திய அதிகாரிகள் என்பது குறிபிடத்தக்கது.
வடக்கில் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனங்கள்
யாழ் மாவட்டம்
1. வைத்தியர் C.S யமுனாநந்தா பிரதிப் பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை
2. வைத்தியர் R.D.G விமலசேன வைத்திய அத்தியட்சகர் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை
3. வைத்தியர் R.M.S.L ரத்னாயக்கா வைத்திய அத்தியட்சகர் ஆதார வைத்தியசாலை வேலணை
4. வைத்தியர் S.தனபால வைத்திய அத்தியட்சகர் ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
வவுனியா மாவட்டம்
1. வைத்தியர் K.தவயோகராஜா பிரதிப் பணிப்பாளர் மாவட்டப் பொது வைத்தியசாலை வவுனியா
2. வைத்தியர் S.C.S சூரியாராச்சி வைத்திய அத்தியட்சகர் ஆதார வைத்தியசாலை செட்டிக்குளம்
கிளிநொச்சி மாவட்டம்
1. வைத்தியர் K.W.M.N மாப்பிட்டிகம பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- கிளிநொச்சி
2. வைத்தியர் D.M.S திசாநாயக்க பிரதிப் பணிப்பாளர் மாவட்டப் பொது வைத்தியசாலை கிளிநொச்சி
மன்னார் மாவட்டம்
1. வைத்தியர் D.வினோதன் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மன்னார்
2. வைத்தியர் J.U.B ரத்னாயக்கா பிரதிப் பணிப்பாளர் மாவட்டப் பொது வைத்தியசாலை மன்னார்
முல்லைத்தீவு மாவட்டம்
1. வைத்தியர் M.S உமாசங்கர் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவு
2. வைத்தியர் K.A.R.P ஜெயதிலக பிரதிப் பணிப்பாளர் மாவட்டப் பொது வைத்தியசாலை முல்லைத்தீவு
#kilinochchi #vavuniya #mullaitheevu #appointments #ministryof health #rajitha