Home இலங்கைமது போதையில் காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்கள் கைது

மது போதையில் காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்கள் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மது போதையில் அட்டகாசம் புரிந்ததுடன் , காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதடி சந்தியில் நேற்றுபுதன்கிழமை மாலை மது போதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று அட்டகாசங்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அங்கிருந்தவர்கள் சாவகச்சேரி காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த போது , காவல்துறையினரைக் கண்டு இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இருந்த போதிலும் ஐந்து இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட ஐந்து இளைஞர்களும் வாகனத்திற்குள் இருந்து காவல்துறையினருடன் வாக்குவாத ப்பட்டதுடன் காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளையும் கைகளால் குத்தி உடைத்துள்ளார்கள். அதன் போது அவர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் காவல்துறையினர் அவர்களை சாவகச்சேரி வைத்திய சாலைக்கு அழைத்து சென்று காயங்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#arrest  #police #mirror

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More