Home இலங்கைநீர்கொழும்பு பகுதியில் ஊரடங்கு – மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை

நீர்கொழும்பு பகுதியில் ஊரடங்கு – மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இன்றைய தினம் மாலை இரண்டு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தபட்டன.

அதனை தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் நாளை திங்கட்கிழமை காலை 07 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவங்களை அடுத்து 10 நாட்கள் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் மீதும் அவை முடக்கப்பட்டுள்ளன.

#nigambo #curfew #socialmedia

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More