Home இலங்கைகுருநகர் பகுதியில் குடு போதைப்பொருள் மீட்பு

குருநகர் பகுதியில் குடு போதைப்பொருள் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து 11 பக்கற்றுகள் குடு போதைப் பொருளை மீட்டனர்.

அதனை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். ‘குருநகர், கடற்கரை வீதியில் அண்ணா சிலைக்கு அண்மையாக உள்ள வீடு சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனையிடப்பட்டது.

இதன்போதே அங்கு ‘குடு’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த வீட்டில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சிறப்பு அதிரடிப் படையினர் முற்றுகையிட்டனர்’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 

#kurunagar #drugs #arrest

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More