Home இலங்கைமன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் 06 செல் கவர்கள் மீட்பு :

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் 06 செல் கவர்கள் மீட்பு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து ஒரு தொகுதில் செல் கவர் மூடப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த காணியில் கொட்டப்பட்டிருந்த குப்பையுடன் சுமார் 6 செல் வெடி பொருளுக்கான கவர் மூடிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த செல் கவரினை திறந்து பார்த்துள்ளனர்.

-எனினும் அதனுள் செல் அல்லது வெடி பொருட்கள் எவையும் காணப்படவில்லை.குறித்த 6 செல் கவரினையும் காவல்துறையினர் மீட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#mannar #shell

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More