யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய பீடமான இந்து கற்கைகள் பீடத்தின் பதில் பீடாதிபதியாக கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 11 ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்து நாகரிகத் துறை, சைவ சித்தாந்தத் துறை, சமஸ்கிருதத் துறை ஆகியன உள்ளடங்கலாக இந்து கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்து கற்கைகள் பீடத்திற்கு நியமனம் பெற்றுள்ள கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதுவும் தமிழ்ச்சங்கம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர் என்பதுவும் குறிப்பிடத்தது
#jaffnauniversity #dean #