Home இலங்கைதேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்

தேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்

by admin

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் கடந்த 02ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டநிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலப்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். .

குறித்த நபர் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ள காவல்துறையினர் குறித்த நபரிடமிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றில் தெரிவித்துள்ளதனையடுத்து இவ்வாறு அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

#ntj #court

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More