குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டமா அதிபரின் சாதகமான பதில் கிடைத்தால் மாணவர்களுக்கு பிணை வழங்கப்படும். சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் நாம் உயர் நீதிமன்றம் வரை சென்று மாணவர்களுக்கான நீதி போராட்டத்தை முன்னெடுப்போம் என சட்டத்தரணி க. சுகாஸ் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்குள் ஒருவரான சட்டத்தரணி சுகாஸ் , மாணவர்களின் பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்ம் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
எங்களால் எழுப்பட்ட ஆட்சேபனைகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி இருந்தாலும் , இற்றைவரை சட்டமா அதிபரின் அறிக்கை நீதிவான் நீதிமன்றுக்கு கிடைக்காமையால் , நீதிவான் நீதிமன்றுக்கு அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு உரிய நியாயாதிக்கம் இல்லை என்றும் அதனால் இந்த வழக்கினை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்
எங்களது பிணை விண்ணப்பம் தற்காலிகமாக மறுதலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்வரும் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரின் சாதகமான அறிக்கை கிடைக்க பெறும் என நம்புகின்றோம்.
அவ்வாறு கிடைக்க பெறாது விடின் உயர் நீதிமன்றம் போக கூட தயங்கமாட்டோம். மாணவர்களுக்கான நீதி போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
#highcour #jaffnauniversity #students #bail