Home இலங்கைமன்னார் மனித புதைகுழி – நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை குறித்து முக்கிய தீர்மானம்

மன்னார் மனித புதைகுழி – நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை குறித்து முக்கிய தீர்மானம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மனித புதைகுழி குறித்து நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கைக்கு தேவையான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அகழ்வின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள் நீதிமன்ற அனுமதியின் பேரில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கையை வழங்கியதன் பின்னர் அகழ்வுப்பணிகளை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் மன்னார் சதொச கட்டட நிர்மாண நடவடிக்கைகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அகழ்வுப் பணிகளின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் பீட்டா நிறுவனத்திற்கு சோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இதன்போது குறித்த மாதிரிகள் 350 முதல் 600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்குரியவை என அமெரிக்காவின் பீட்டா நிறுவனத்தினால் கால எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#mannar #Humangrave #court #report

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More