Home இலங்கையாழ்.எழுதுமட்டுவாழில் புகையிரத விபத்து மினிவான் சிதைந்தது….

யாழ்.எழுதுமட்டுவாழில் புகையிரத விபத்து மினிவான் சிதைந்தது….

by admin

யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் மினிவான் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.  யாழில்.இருந்து இன்று காலை கொழும்புக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த கடுகதி புகையிரதமே விபத்துக்கு உள்ளானது. எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மினிவான் ஒன்று கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது..

குறித்த விபத்தில் மினிவான் முற்றாக சேதமடைந்துள்ள போதிலும் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மினிவான் சேவையை ஆரம்பிபதற்காக தரிப்பிடத்தை நோக்கி செல்லும் போதே குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் அதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #train #accident

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More