Home இலங்கைவவுனியாவில் விடுதலைப் புலிகள் தயாரித்த கைக்குண்டு மீட்பு…

வவுனியாவில் விடுதலைப் புலிகள் தயாரித்த கைக்குண்டு மீட்பு…

by admin

வவுனியா மயிலங்குளம் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் பயன்படுத்திய கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை மயிலங்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு காணப்படுவதாக விறகு வெட்டுவதற்குச் சென்ற சில நபர் வழங்கிய தகவலையடுத்து மடுகந்தை காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டது.

இதன்போது விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற படையினர் கைக்குண்டை மீட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். #vavunia #ltte #hand renade

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More